Historische roman Ponniyin Selvan geschreven door Kalki Krishnamurthy,

Laatste Versie

Update
26 aug. 2023
Ontwikkelaar
Installaties
500+

App APKs

பொன்னியின் செல்வன் APP

Historische roman Ponniyin Selvan geschreven door Kalki Krishnamurthy,
Een van de beste romans in de Tamil-taal.
Kalki deed wat magie met betrekking tot verbeelding, fictie, afbeelding van natuurtaferelen in het ponniyin selvan-boek.
Wijd dit speciaal voor liefhebbers van tamil en geschiedenisliefhebbers.

அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினங்ககளில் மிக முக்கியமான புதினம் பொன்னியின் செல்வன் ஆகும்
இப் புதினத்தை படிக்கும் போதே உங்களை சோழ நாட்டுக்கு அழைத்து செல்வது உணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

சோழ வரலாற்றின் பெருமையை கல்கியின் வாயிலாக இந்த உலகம் அறியவேண்டும்.

இப்புதினத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர் முதற்கொண்டு பல மாபெரும் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். திரைப்பட வடிவில் கொண்டுவர முயற்சிக்கும் அத்துணை கலைஞர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

ஆக சிறந்த நூல்களில் ஒன்றான இம்மாபெரும் புதினத்தை உங்களுக்கு மென்பொருள் வடிவத்தில் வழங்குவதில் தாராவின் உலகம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது


இத்தகைய வர்ணனைகளையும் மிஞ்சும் எழில் அழகோடு கூடிய சோழ நாட்டிற்கு மின்புத்தகத்தின் வழியே பயணிப்போமா !!
வாருங்கள்🚶🚶🚶🚶🚶🚶


இப்புதினம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பகுதி 1: புது வெள்ளம்
பகுதி 2: சுழற்காற்று
பகுதி 3: கொலை வாள்
பகுதி 4: மணிமகுடம்
பகுதி 5: தியாகச் சிகரம்


இப்புதினத்தின் வரும் கதாபாத்திரங்கள்
வல்லவரையன் வந்தியத்தேவன்
அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
குந்தவை பிராட்டியார்
பெரிய பழுவேட்டரையர்
நந்தினி
சின்ன பழுவேட்டரையர்
ஆதித்த கரிகாலர்
சுந்தர சோழர்
செம்பியன் மாதேவி
கடம்பூர் சம்புவரையர்
சேந்தன் அமுதன்
பூங்குழலி
குடந்தை சோதிடர்
வானதி
மந்திரவாதி ரவிதாஸன் (பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
கந்தமாறன் (சம்புவரையர் மகன்)
கொடும்பாளூர் வேளார்
மணிமேகலை (சம்புவரையர் மகள்)
அநிருத்த பிரம்மராயர்
மதுராந்தக சோழர்


பொன்னியின் செல்வன் புத்தகத்திலிருந்து ஒரு சில வரிகள் உங்களுக்காக

அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? "

"அடித்துக்கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை, மலையான வண்ண மலர்க் குவியல்கள் அவன் மீது "

“கோமகனே! அதற்குப் பரிகாரம் ஒன்றும் கிடையாது. இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்! இறந்தவர்களைப் பிழைக்கச் செய்யும் சக்தி இந்த உலகில் யார்க்கும் கிடையாது. கதைகளிலே காவியங்களிலே சொல்கிறார்கள். நாம் பார்த்ததில்லை "என்றாள்."

"'இது என் குதிரை! இது என் யானை! இரு என் கிரீடம்! இது என் குடை!’ அவர்கள் பேசிக் கொள்வார்கள் என்றும் சொன்னீர்கள். அவ்வாறு பெருமையடித்துக் கொண்டவர் இவ்வளவு அடக்கம் கொண்டவரானது ஏன்? "

என் காதல்
அரசியல் நாடகம்
என்று எண்ணுகிறீர்களா!

சபதம் ஒன்று
ஏற்றேன்
நான் உங்களுக்கு
உரியவள் எனும்
பொழுது இந்த
சாம்ராஜ்யம்
எனக்கு எதற்கு ...
ஒரு காலமும் வேண்டாம் ...
Meer informatie

Advertentie