எழு பெரு வள்ளல்கள் (Ezhu Peru APP
எழுதியவர்: கி.வா. ஜகந்நாதன்
சங்க நூல்களால் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள் பல. மன்னர்கள், புலவர்கள், வள்ளல்கள், பெண்மணிகள் பலரைப் பற்றிய செய்திகளை அவற்றால் அறிந்து கொள்ளலாம். வள்ளல்கள் எழுவர் என்ற வழக்கு மிகப் பழங்கால முதல் இந்நாட்டில் இருந்து வருகிறது. சிறு பாணாற்றுப் படையில் அவர்கள் பெயர்களை நத்தத்தனார் சொல்கிறார். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பெருஞ் சித்திரனார் என்னும் புலவரும் அவர்களைச் சொல்கிறார். பின்னால் வந்த நிகண்டுகளின் ஆசிரியர்கள் அவர்களை வரிசையாகத் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஏழு வள்ளல்களின் வரலாறுகளைத் தொடர்ச்சியாகச் சொல்லும் நூல் எதும் இல்லையாயினும், சங்கநூல்களில் கிடைக்கும் குறிப்புக்களைக் கொண்டு ஒருவாறு அவற்றை உணர்ந்து கொள்ளலாம். சில வள்ளல்களின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் புலனாகின்றன; . தமிழ்நாட்டுச் சிறுவர்களும் சிறுமியரும் இவற்றைப் படித்துப் பயன் பெறக்கூடும் என்பது என் எண்ணம்.
ஆசிரியர் குறிப்பு: கி.வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் [1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார் [2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது [3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
உள்ளடக்கம்:
1. ஏழு வள்ளல்கள்
2. பாரி
3. பேகன்
4. அதிகமான்
5. காரி
6. ஓரி
7. ஆய்
8. நள்ளி
Ontwikkelaar:
Bharani Multimedia-oplossingen
Chennai - 600 014.
E-mail: bharanimultimedia@gmail.com