Asma Ul Husna தமிழ் APP
அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) என்று திருக்குர்ஆன் 7:180-ல் வந்துள்ளது.
யார் அல்லாஹ்வை அழகான முறையில் நினைவு கூறுகிறார்களோ அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! என்று திருக்குர்ஆன் 13:28-ல் வந்துள்ளது.
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன் என்று திருக்குர்ஆன் 59:24-ல் வந்துள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையே, எல்லா நிலைகளிலும் இறைவனை நினைத்திருப்பதே நம்மை ஈருலகிலும் வெற்றியடையச் செய்யும். அல்லாஹ்வின் அழகான திருநாமங்களை மனனம் செய்வதோடு சிந்தித்து, புரிந்து அவற்றை செயல்படுத்துவதே சிறந்தது.
If you found any issue or suggestion in this app, please inform us by email.(nazimtheen@gmail.com)